Wednesday, April 4, 2012

நூல் அறிமுகம் – ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஆர்.டி.எம் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழு என்னை நேர்காணல் செய்தது. மாதந்தோறும் ஒளிப்பரப்பாகும் “நூல் வேட்டை” நிகழ்ச்சிகாகவே அவர்கள் நாவலாசிரியரான என்னைச் சந்தித்தார்கள். ஒரு சில கேள்விகளை மட்டும் முன்வைத்து எங்களின் உரையாடல் நீண்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.



உங்கள் நாவலின் உட்பொருள் என்ன?

பாலமுருகன்: இந்த நாவல் மலேசியத் தமிழர்களின் தோட்ட அவலங்களைப் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், மையப் பிரச்சனையான வறுமையும் கடன் தொல்லையும் மட்டுமே நாவலின் ஆதாரம். பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவாக இருந்தாலும் நாவல் அதனை நோக்கி பெரும்வாழ்வாக விரிகிறது. ஒரு குடும்பம் கடனாலும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலாலும் எப்படிச் சிதைந்து போகின்றன என்பதையே நாவல் மையப்பொருளாகப் பெசுகின்றன.